search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்
    X

    மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

    • மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தகுதியுள்ள சமுதாய அமைப்புகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 25-ந்தேதிக்குள் கருத்துருக்களை ஊரகப்பகுதிகளில் வட்டார இயக்க மேலாளர்களிடமும், நகர்ப்புற பகுதிகளில் சமுதாய அமைப்பாளர்களிடமும் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

    கரூர்:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகளுக்கு 2021-22-ம் ஆண்டுக்கான அரசாணை வரப்பெற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2022-23-ம் ஆண்டு மணிமேகலை விருது வழங்குவதற்கான ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இந்த விருதுக்கு சமுதாய அமைப்புகளிடமிருந்து வரப்பெறும் கருத்துருக்களை வட்டார இயக்க மேலாளர்கள் உரிய ஆவணங்கள் அடிப்படையில் பரிசீலித்து ஒவ்வொரு சமுதாய அமைப்புக்கும், இறங்குவரிசைப்படி பட்டியல் தயார் செய்து மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது. எனவே, தகுதியுள்ள சமுதாய அமைப்புகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 25-ந்தேதிக்குள் கருத்துருக்களை ஊரகப்பகுதிகளில் வட்டார இயக்க மேலாளர்களிடமும், நகர்ப்புற பகுதிகளில் சமுதாய அமைப்பாளர்களிடமும் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×