search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் 160 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    X

    கரூரில் 160 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

    • கரூரில் 160 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது
    • இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டது

    கரூர்:

    கரூர் மாவட்டம், முழுவதும் இந்து முன்னணி சார்பில், 160 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கரூரில் இன்று மாலை, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப் பட்டு, காவிரியாற்றில் கரைக்கப்படுகிறது.

    நாடு முழுவதும் நேற்று, விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. கரூர் மாவட்டத்தில், இந்து முன்னணி சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம், குளித்தலை, அர வக்குறிச்சி, சின்னதாராபுரம் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில், விநாயகர் 160 சிலைகள் சிறப்பு பூஜைகளுடன், பிர திஷ்டை செய்யப்பட்டன.

    கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன் நேற்று அதிகாலை, 10 அடி உயரம் உள்ள விநாயகர் சிலை, ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய் யப்பட்டது. அப்போது, பக்தர்கள் வழிப்பட்டனர்.

    கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், இன்று மாலை, ஆறு மணிக்கு, 80 அடி சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. பிறகு, அங்கிருந்து சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, வாங்கல் காவிரியாற்றில் கரைக்கப்பட உள்ளது. அதே போல், க.பரமத்தி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள், அமராவதி ஆற்றிலும் இன்று மாலை கரைக்கப்படுகிறது.

    அதேபோல், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, குளித்தலையில் நாளையும், சின்ன தாராபுரத்தில் வரும், 3ம் தேதி விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்படுகின்றன.

    Next Story
    ×