search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில், 6-ந்தேதி - கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி
    X

    கரூரில், 6-ந்தேதி - கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி

    • நேரு பிறந்தநாளையொட்டி வருகிற 6-ந்தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சு போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • இப்போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

    கரூர்

    கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023-ம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி வருகிற 6-ந்தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சு போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் 6-ந்தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் 6-ந்தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடத்தப்படுகிறது.

    இப்போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

    மகாத்மா காந்தி பேச்சுப்போட்டிக்கு காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம்,சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளிலும்,

    ஜவகர்லால் நேரு பேச்சுப்போட்டிக்கு சுதந்திர போராட்டத்தில் நேரு, பஞ்சசீல கொள்கை, நேருவின் வெளியுறவு கொள்கை ஆகிய தலைப்புகளிலும் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.

    கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரி கல்வி இணைஇயக்குனர் வழியாக இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டிடத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டரால் பரிசுகள் வழங்கப்படும்.

    Next Story
    ×