search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் 17 ஆயிரம் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை
    X

    கரூரில் 17 ஆயிரம் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை

    • கரூரில் 17 ஆயிரம் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யபட்டது
    • ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும், பிரசவகால பின் கவனிப்பு 48 நாட்கள் வரை கட்டாயம், கிராம சுகாதார செவிலியர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

    கரூர்:

    கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சுகாதார துறை பணி ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது, உதிரம் உயர்த்துவோம் திட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்ட, 17 ஆயிரம் மாணவியருக்கு வரப்பெற்ற முடிவை வகைப்படுத்தி, அவர்களுக்கு ரத்தசோகை தொடர்பாக சிகிச்சை அளிப்பது, சிசு மரணம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.சிசு இறப்பை முற்றிலும் தவிர்க்க மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும், பிரசவகால பின் கவனிப்பு 48 நாட்கள் வரை கட்டாயம், கிராம சுகாதார செவிலியர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

    குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிதல் பற்றி ஆய்வு செய்து, பிறவி காதுகேளாமை போன்ற நோய்களை துரிதமாக கண்டறிய வேண்டும். அனைத்து மருத் துவமனைகளிலும் குறைந்தது 3 மாத இருப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினார்.நிகழ்ச்சியில், இணை (மருத்துவ நலப்பணிகள்) இயக்குனர் ரமாமணி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சந்தோஷ்குமார், கரூர் அரசு மருத்து வமனை மருத்துவ கல்லுாரி முதல்வர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×