search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் காகிதக்கூழ் பிரிவில் கட்டணமில்லா தொழிற் கல்வி பட்டயப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
    X

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் காகிதக்கூழ் பிரிவில் கட்டணமில்லா தொழிற் கல்வி பட்டயப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் காகிதக்கூழ் பிரிவில் கட்டணமில்லா தொழிற் கல்வி பட்டயப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டது
    • ஜுன்.1 அன்று 18 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்

    கரூர்,

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் 5 மாணாக்கர்கள் தேர்வு செய்து, அவர்கள் திருச்சி சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காகிதக் கூழ் பிரிவில் மூன்றரை ஆண்டுகள் இலவச கல்வி பயில வழிவகை செய்யப்படுகிறது. மாணாக்கர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வுகட்டணம் ஆகியவை காகித நிறுவனத்தால் கல்லூரிக்கு செலுத்தப்படும்.

    இந்த கட்டணமில்லாக் கல்வித்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற, கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை, அலகு-1 ஐ சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, பு.தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் ந.புகழூர், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை, அலகு-II ஐ சுற்றி அமைந்துள்ள மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி, சித்தாநத்தம் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்து குறைந்தபட்சம் பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வில் முதன் முறையில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் தகுதியுடையவர்களாவர்.

    ஜுன்.1 அன்று 18 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் மொத்தம் 5 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சிபெற விருப்பமுள்ள மாணாக்கர்கள் விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், காகிதபுரம் அலகு-1-ன் மனிதவளத் துறையிலும் மற்றும் மொண்டிப்பட்டி அலகு-II-ன் கால அலுவலகத்திலும் பெற்று. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, விண்ணப்பங்கள் பெறப்பட்ட இடத்திேலயே 15.06.2023 (வியாழக்கிழமை) அன்று மாலை 5.30 மணிக்குள் சமர்பிக்குமாறு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×