search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கோட்டாட்சியரிடம் மனு
    X

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கோட்டாட்சியரிடம் மனு

    • ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
    • கோட்டாட்சியர் தங்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்றார்

    கரூர்:

    குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராச்சாண்டர் திருமலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விரையாச்சிலை, ஈஸ்வரர் சமேத ஸ்ரீ பெரியநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீ கோலமாவயிரம் கொண்ட பிடாரியம்மன், ஸ்ரீ கரையூர் மற்றும் ஸ்ரீ நீலமேகம் கோவில் ஊர் பொதுமக்கள் சார்பாக கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு விழா நடத்தியுள்ளனர், கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா காலகட்டங்கள் என்பதால் ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லையென கூறுகின்றனர். இந்த ஆண்டு கொரோனா இல்லாத நிலையில், வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 17.01.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவியிடம் அனுமதி மற்றும் பல்வேறு ஆலோசனைகள் வழங்க கோரிக்கை மனுவை ஊர் பொதுமக்கள் சார்பாக ஜல்லிக்கட்டு குழுவினர் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×