search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நெரூர் காவிரி ஆற்று பகுதி பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    நெரூர் காவிரி ஆற்று பகுதி பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    • நெரூர் காவிரி ஆற்று பகுதி பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கழிப்பிடங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

    கரூர்:

    தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா வரும் ஆகஸ்ட் 3ல் கொண்டாடப்பட உள்ளது. காவிரி பகுதியில் பொதுமக்கள் புனித நீராடுவர். அதில் கரூர் மாவட்டத்தில் வேலாயுதம் பாளையம், புகழூர், வாங்கல், நெரூர் மற்றும் மாயனூர், லாலாபேட்டை, குளித்தலை ஆகிய பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா களைகட்டி இருக்கும். புதுமண தம்பதிகள் ஆற்றில் வந்து சுவாமியை வழிபடுவர். சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறுகளை கட்டிக் கொள்வது வழக்கம். காவிரி ஆற்றுப் பகுதி ஆன நெரூரில் சதாசிவ பிரம்மேந்திர கோவில் உள்ளது. அங்கு செல்லும்போது பொதுமக்கள் காவேரி ஆற்றில் குளித்துவிட்டு வழிபாடு செல்வது வழக்கம். இதனால் காவேரி ஆற்றின் கரையோர பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பிடங்கள், சிறுவர் பூங்கா ஆகியவை பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டன. ஆனால் தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இந்நிலையில் ஆடிப்பெருக்கு விழாவுக்கு இன்னும் குறைவான நாட்களை உள்ள நிலையில் கழிப்பிடம் மற்றும் பூங்காவை சீர் செய்ய வேண்டி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×