என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறுகள் - கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் அனுப்பினர்
- கடந்த 2017-ம் ஆண்டு முதல் ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறுகளை கரூர் பரணிபார்க் பள்ளி மாணவ, மாணவிகள் அனுப்பி வருகிறார்கள்
- ராக்கி கயிறுகளில் படைமாட்சி அதிகாரத்தில் உள்ள திருக்குறளை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியர்களே பொறித்தனர்.
கரூர் :
ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு, ராணுவ வீரர்களுக்கு 1.5 லட்சம் ராக்கி கயிறுகளை கரூர் பரணிபார்க் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனுப்பினர்.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறுகளை கரூர் பரணிபார்க் பள்ளி மாணவ, மாணவிகள் அனுப்பி வருகிறார்கள்.
நிகழாண்டு நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூறும் வகையிலும், பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கி, முப்படை களின் தலைவராகவும், குடியரசுத் தலைவராகவும் பதவியேற்ற திரெளபதி முர்முவை கௌரவப்படுத் தும் வகையிலும் இப்பள்ளியில் 1.5 லட்சம் ராக்கி கயிறுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது.
இதில், 75,000 ராக்கி கயிறுகளில் படைமாட்சி அதிகாரத்தில் உள்ள திருக்குறளை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியர்களே பொறித்தனர். மீத முள்ள 75,000 ராக்கி கயிறுகளை மாணவ, மாணவிகள் தயாரித்தனர். இந்தப் பணி திங்கள்கிழமை நிறைவு பெற்றதை அடுத்து கரூர் ரயில் நிலைய மேலாளர் ராஜராஜன் முன்னிலை பள்ளித் தாளாளர் எஸ்.மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி ஆகி யோர் தலைமையில் ரயில் மூலம் புதுதில்லிக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து பள்ளி முதன்மை முதல்வர் சொ.ராமசுப்ரமணியன் கூறுகையில்,நிகழாண்டு சற்று வித்தியாசமாக திருக்குறளை 18 வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து, ஒவ்வொரு ராக்கியிலும் ஒருமொழியில் திருக்குறளை ஆசிரியர்களாகிய நாங்களே பதித்துள் ளோம்.
இந்த ராக்கி கயிறுகள் முன்னாள் எம்.பி. தருண் விஜய்யிடம்வழங்கப்பட்டு, அவர் ஆகஸ்ட் 11ஆம்தேதி நடைபெறும் ரக்ஷா பந்தன் விழாவில் ராணுவ அதிகா ரிகளிடம் வழங்குவார். அவர்கள் மூலம் 18 மொழிகள் கொண்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாட்டை பாதுகாத்துக்கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் கைகளில் அணிவிக்கப்பட உள்ளது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்