search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்-வருகிற 12ம் தேதி  நடைபெறுகிறது
    X

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்-வருகிற 12ம் தேதி நடைபெறுகிறது

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் 12ம் தேதி நடைபெற உள்ளது
    • இம்முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தேநீர் மற்றும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கரூர்:

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் உதவியுடன் காகித ஆலையைச சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, பு.தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் திருக்காடுதுறை. வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், நயுகழூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு உள்ளடங்கிய பகுதிகளில் வருகிற 12 -ந் தேதி காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையில், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.மேலும், இம்முகாமில் கண் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை வெள்ளெழுத்து உள்ள ஏழை எளிய மக்களுக்கு கண் கண்ணாடிகள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பாக இலவசமாக வழங்கப்படவுள்ளது. கண்புரை உள்ள நோயாளிகள் அனைவருக்கும் உள்விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம், இம்முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தேநீர் மற்றும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமிற்கு கிராம பகுதிகளிலிருந்து கண் குறைபாடு உள்ளவர்களை அழைத்து வர ஆலை நிர்வாகம் புன்னம்சத்திரம். தளவாபாளையம், நொய்யல் குறுக்குசாலை, வேலாயுதம்பாளையம் மற்றும் ஓனவாக்கல்மேடு ஆகிய ஐந்து வழித்தடங்களில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இம்முகாமிற்கு வருபவர்கள் தங்களது ஆதார் அட்டை நகல், பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று காகித ஆலை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×