search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
    X

    கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

    • தி.மு.க., அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் மீது கூறியுள்ள ஊழல் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • தி.மு.க., ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்ட வகையில் வி.ஏ.ஓ.,வை அலுவலகத்திலேயே கொலை செய்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், கட்சி வளர்ச்சி குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும், மேதின விழாவை நடத்துவது குறித்தும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை வகித்தார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அசோக்குமார் உறுப்பினர் சேர்க்கை புத்தகம் வழங்கி ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்தில், கட்சி அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்வது.

    கிழக்கு மாவட்டத்தில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். நாளை (மே1) கட்சி சார்பில் மே தின விழாவை கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்த சிறப்பான முறையில் நடத்த வேண்டும்.

    தி.மு.க., அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் மீது கூறியுள்ள ஊழல் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையில் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி உள்ள தொழிலாளர்கள் விரோத தி.மு.க., அரசை வன்மையாக கண்டிப்பது.

    தி.மு.க., ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்ட வகையில் வி.ஏ.ஓ.,வை அலுவலகத்திலேயே கொலை செய்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மக்பூல், ஐ.டி., பிரிவு செயலாளர் வேலன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×