search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில்  ராகுல்காந்தி பாத யாத்திரை குறித்து கே.எஸ். அழகிரி ஆலோசனை  எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
    X

    குமரி மாவட்டத்தில் ராகுல்காந்தி பாத யாத்திரை குறித்து கே.எஸ். அழகிரி ஆலோசனை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

    • இந்த கூட்டத்தில் பொருளாளர் ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ., எம்.பி.கள் விஜய்வசந்த், ஜோதிமணி, செல்லகுமார், ஜெயக்குமார், மாணிக் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி, அசன், கணேஷ், மாவட்டத் தலைவர்கள் நவீன்குமார், கே.டி.உதயம், பினுலால் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • சுசீந்திரத்திலிருந்து பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி நாகர்கோவில் தக்கலை குழித்துறை வழியாக களியக்காவிளை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அவர் செல்லும் பாதைகளில் நிர்வாகிகள் வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    நாகர்கோவில், ஆக.12-

    ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பாத யாத்திரை செல்கிறார்.

    பாதயாத்திரையை கன்னியாகுமரி மாவட்டத் தில் இருந்து தொடங்குவதற்கு அவர் திட்டமிட்டு உள்ளார். அடுத்த மாதம் 7-ந் தேதி சுசீந்திரத்தில் இருந்து பாதயாத்திரை புறப்படுகிறார். சுசீந்திரத்தில் இருந்து களியக்காவிளைக்கு சுமார் 65 கிலோ மீட்டர் தூரம் எனவே 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    களியக்காவிளையில் இருந்து கேரள மாநிலத்திற்கு பாத யாத்திரை செல்கிறார்.பின்னர் அவரது தொகுதி யான வயநாட்டிலும் பாத யாத்திரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 16 மாநிலங்களில் 3500 கிலோமீட்டர் தூரம் ராகுல் காந்தி பாதயாத்திரை செல் லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தி பாத யாத்திரை முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவிலில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத் தில் அகில இந்திய பொதுச் செயலாளர் வேணு கோபால், மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங்,அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பொருளாளர் ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ., எம்.பி.கள் விஜய்வசந்த், ஜோதிமணி, செல்லகுமார், ஜெயக்குமார், மாணிக் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி, அசன், கணேஷ், மாவட்டத் தலைவர்கள் நவீன்குமார், கே.டி.உதயம், பினுலால் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாத யாத்திரையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர். சுசீந்திரத்திலிருந்து பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி நாகர்கோவில் தக்கலை குழித்துறை வழியாக களியக்காவிளை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அவர் செல்லும் பாதைகளில் நிர்வாகிகள் வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்

    Next Story
    ×