search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவை கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோவை கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை கோட்டைமேடு பகுதியில் பூமி நீளா நாயிகா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பா பிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தது.

    திருப்பணிகள் முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. அன்று காலை புதிய கொடிமர யந்திர ஸ்தாபனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி, திக்பந்தனம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன.

    14-ந் தேதி காலை 8.30 மணிக்கு லட்சுமி ஹயக்ரீவ ஹாமம், பூர்ணாகுதி பூஜைகளும், 10.40 மணிக்கு மேல் மூலவர் விமானம் மற்றும் சாளஹார விமான கலச பிரதிஷ்டையும் நடந்தது.

    15-ந் தேதி காலை 7 மணிக்கு மேல் முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. 9.30 மணிக்கு மேல் மூலமூர்த்திகளுக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது.

    நேற்று காலை 8.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூ ஜையும், மாலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும் நடந்தது. இன்று காலை 6.30 மணிக்கு 5-ம் கால யாக பூஜை நடந்தது. காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அனைத்து சன்னதிகள் மற்றும் சாளஹார கோபுரங்களில் மகா சம்ப்ரோக்ஷனம் எனப்படும் கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அன்ன தானம் வழங்கப் பட்டது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 8 மணிக்கு பெருமாள் திருவீதி புறப்பாடு நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய் யப்பட்டிருந்தது. பக் தர்கள் வாகனங்களை நிறுத்த இட வசதியும் செய்யப்பட்டி ருந்தது. மேலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டது.

    Next Story
    ×