search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் அருகே கொங்காலம்மன் கோவில் கும்பாபிஷேகம்3-ந் தேதி நடக்கிறது
    X

    வெள்ளகோவில் அருகே கொங்காலம்மன் கோவில் கும்பாபிஷேகம்3-ந் தேதி நடக்கிறது

    • கொங்காலம்மன் பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தனம் சாற்றுதல் நடைபெற உள்ளது.
    • வேலாயுதகவுண்டன் புதூா், கருப்பன்வலசு புதூா் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே சேனாபதிபாளையம், அய்யனூாில் உள்ள கொங்காலம்மன் கோவிலை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்தது. அதைத்தொடா்ந்து வரு–கிற 3-ந்தேதி இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று காலை 7 மணிக்கு மகா கணபதிஹோமம் நடந்தது. நாளை 28-ந் தேதி கொடுமுடியில் இருந்து தீா்த்தம் கொண்டு வரப்படுகிறது. முளைப்பாாியும் எடுத்து வரப்படுகிறது. மாா்ச் 1-ந்தேதி காப்பு கட்டுதல், கும்பஅலங்காரம், முதல் கால யாக பூஜை ஆகியவை நடைபெறுகிறது. 2-ந்தேதி காலை 8 மணிக்கு 2 மற்–றும் 3-ம் கால பூஜையும், தீபாராதனையும் நடைபெறுகிறது. அன்று இரவு கொங்காலம்மன் பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தனம் சாற்றுதல் ஆகியவை நடைபெற உள்ளது.

    வருகிற 3-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால பூஜையும், 6.45 மணிக்கு கோபுர கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து விநாயகா், கொங்காலம்மன், மூலவா் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மகாபிஷேகம் மற்றும் தாிசனமும், மதி–யம் 12.30 மணிக்கு மகாபிஷேக தீபாராதனை, பிரசாதம் மற்றும் முளைபாாி நீர்த்துறை சோ்தல் ஆகியவை நடைபெறும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 1-ந்தேதி காலை 7 மணி முதல் 3-ந்தேதி மதியம் 2 மணி வரை தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அய்யனூா், வேலாயுதகவுண்டன் புதூா், கருப்பன்வலசு புதூா் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

    Next Story
    ×