search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ெபாள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
    X

    ெபாள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

    இதை தொடர்ந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து விமான பாலாயம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

    பழமை வாய்ந்த விமான கோபுரத்துக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம்பூசி புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டன.

    கடந்த மாதம் 12-ந் தேதி யாக சாலை அமைக்கும் பணிக்கு கால்கோள் நாட்டப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 23-ந் தேதி முதல் கும்பாபிஷேக விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நேற்று காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பின்னர் மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாக பூைஜ நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று காலை 9.45 மணிக்கு நடந்தது. ராஜகோபுரம், மாரியம்மன் விமான கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, விநாயகர், முருகன், அங்காளம்மன், அன்னை மாரியம்மன் மூலாலய மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கும்பாபிஷேக விழாவை பார்த்து, மாரியம்மனை தரிசித்து சென்றனர்.

    இதனையொட்டி பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்ப ட்டிருந்தது. போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது.

    Next Story
    ×