என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
லேப்-டெக்னீசியன் தற்கொலை
- தருமபுரியில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
- அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கரண் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தருமபுரி,
தருமபுரி கோல்டன் தெருவைச் சேர்ந்த கனகராஜ். சுமை தூக்கும் கூலித்தொழிலாளி. இவரது மகன் கரண் (வயது25). லேப்-டெக்னீசியான இவர் தருமபுரியில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கரண் தனியாக ரத்த பரிசோதனை நிலையம் அமைக்க வேண்டும் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் சிறிது காலம் போகட்டும் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று கூறியதால் கரண் மனவேதனையுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட முயன்றார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது தான் விஷம் குடித்ததாக தெரிவித்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கரண் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி டவுன் போலீசார் உடனே கிருஷ்ணகிரிக்கு சென்று கரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.