search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கே.கே.பி. நூற்பாலையில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
    X

    கே.கே.பி. நூற்பாலையில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற காட்சி.

    கே.கே.பி. நூற்பாலையில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

    • நஷ்ட ஈடு வழக்கு தொடருதல் மற்றும் சமரச தீர்வு காணும் முறைகள் ஆகியவற்றை குறித்தும் விழிப்புணர்வு வழங்கினார்.
    • இதில் 100-க்கும் மேற்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி வழிகாட்டுதலின்படி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பாக செயலாளர் தலைமையில் துறையூர் ரோட்டில் உள்ள கே.கே.பி நூற்பாலையில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு பற்றிய முகாம் நேற்று நடைபெற்றது.

    இதில் மாவட்ட சட்டப் பணிக்குழுவின் செயலளார் விஜய்கார்த்திக், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள், தொழிலாளர்கள் சட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், பணிபுரியும் இடத்தில் ஏற்படும் விபத்திற்கு நஷ்ட ஈடு பெறும் முறை மற்றும் தொழிலாளர் துணை ஆணையரிடம் நஷ்ட ஈடு வழக்கு தொடருதல் மற்றும் சமரச தீர்வு காணும் முறைகள் ஆகியவற்றை குறித்தும் விழிப்புணர்வு வழங்கினார்.

    மதுரை குட்வில் சமூக நற்பணி மன்ற திட்ட அலுவலர் ஜேம்ஸ், போதை பொருள் தவிர்ப்பு ஆகியவற்றை பற்றி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.

    இம்முகாமிற்கு கே.கே.பி குழும தலைவர் நல்லதம்பி முன்னிலை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் மற்றும் இளஞ்சிறார் நீதிக் குழும உறுப்பினர் ஆண்டனி செய்திருந்தார்.

    Next Story
    ×