search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தேனியில் நடப்போம் நலம்பெறுவோம் நடைபயிற்சி திட்டம் -கலெக்டர்  தொடங்கி வைத்தார்
    X

    நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தினை தொடங்கி வைத்து நடைபயிற்சி மேற்கொண்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் அலுவலர்கள்.

    தேனியில் நடப்போம் நலம்பெறுவோம் நடைபயிற்சி திட்டம் -கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • கலெக்டர் ஷஜீவனா தேனி மாவட்டத்தில் அரண்மனைப்புதூர் பகுதியில் தொடங்கி வைத்து நடைபயிற்சியில் பங்கேற்றார்.
    • நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு நடைபாதையில் இருக்கை வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் செய்துதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தேனி:

    சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக நேரலையில் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, சரவணக்குமார் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் தேனி மாவட்டத்தில் அர ண்மனை ப்புதூர் பகுதியில் தொடங்கி வைத்து நடைபயிற்சியில் பங்கேற்றார்.

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவை யில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபயிற்சிபாதைகள் கண்ட றியப்பட்டு நடைபயி ற்சியை ஊக்குவிக்கும் வகையில் நடைபயிற்சிபாதைகள் உருவாக்கப்படும் என அறிவித்தார். தேனி மாவட்டத்தில் இயற்கையான நடைபயிற்சி பாதையை கண்டறியும் விதமாக மாவட்ட கலெக்டர் தலைமையில் கடந்த 04.06.2023 முதல் 29.10.2023 வரை 29 நாட்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டது.

    இத்திட்டம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்சுப்பிரமணியன் கடந்த 7.9.2023 அன்று தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதை கண்டறியப்பட்டு, ஆரோக்கியமான நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதை உறுதிசெய்தார்.

    தேனி மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் என்னும் நடைபயிற்சி திட்டம் அரண்மனை புதூர் ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு தொடங்கி கொடு விலார்பட்டி, பள்ளபட்டிபிரிவு, அய்யனா ர்புரம் பிரிவு, கோட்டைப்ப ட்டி வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் ஊராட்சிமன்ற அலுவலகம் வந்தடையும் வகையில் 8 கி.மீ தூரம் இயற்கை எழில் சூழ்ந்த வகையிலும், தூய்மையான காற்று கிடைக்க பெறும் வகையிலும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது .

    பொதுமக்களிடையே தினசரி நடைப்பயிற்சி பழக்கத்தினை ஊக்கபடுத்தவும் நடை பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    60 வயதிற்கு மேற்ப ட்டவர்களிடம் காணப்பட்ட உயர் ரத்த அழுத்தமும், நீரழிவு நோயும் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே காணப்படுகிறது. இதனால் சிறுவயதிலேயே மாரடைப்பு போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    இந்நோய்கள் வராமல் தடுப்பதற்கும், நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் நடைப்பயிற்சி இன்றியமையாததாகும்.

    நமது நாட்டிலேயே முதல் மாநிலமாக நமது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் தனித்துவமான திட்டமாகும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் எடை சீராக பராமரிக்கப்படுகிறது. மேலும் அன்றையதினம் முழுவதும் உற்சாகத்துடனும் சுறுசுறுப்பாக செயல்படவும் உதவுகிறது. மேலும் இந்த நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு நடைபாதையில் இருக்கை வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் செய்துதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு, உருவாக்கப்பட்ட நடைபயிற்சி பாதைகளை பயன்படுத்தி, நடைபயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வு பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர்ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமிதா, இணை இயக்குநர் (பொதுசு காதாரத்துறை இயக்குநரகம், சென்னை) சண்முகசுந்தரம், தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலை வர்ச க்கரவர்த்தி, துணை இயக்குநர் (சுகாதா ரப்பணிகள்) குமரகுருபரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை, தேனி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர்முருகன், அரண்மனைப்புதூர் ஊராட்சிமன்ற தலை வர்பிச்சை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×