search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூரில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி
    X

    திருவள்ளூரில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி

    • திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் வங்கிகளுடனான கூட்டம் நடைபெற்றது.
    • நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் குணசேகரன் மற்றும் சுகாதார அலுவலர்கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருவள்ளூர்:

    தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் திருவள்ளூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 2023 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. மொத்தம் 1207 பேருக்கு முதல் தவணையில் ரூ.10 ஆயிரம் வீதமும், இரண்டாவது தவணையில் 297 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம்,3-வது தவணையாக 13 பயனாளிகளுக்கு ரூ.50ஆயிரம் வீதம் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 742 விண்ணப்பங்கள் வங்கிகளிடமிருந்து திரும்ப பெறப்பட்டது. அந்த விண்ணப்பங்களை மீண்டும் கடன்பெறும் வகையில் தயார் செய்ய திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் வங்கிகளுடனான கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சமுதாய அமைப்பாளர் சாந்தி-7010270560, சமுதாய வளபயிற்றுனர்கள் நாகேஷ்வரி-8608242774, சகிலா-7397133219 ஆகியோரின் எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று மீண்டும் பதிவேற்றம் செய்ய கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டு உள்ளது.இதில் மகளிர் உதவி திட்ட அலுவலர், பெரியநாயகம். நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் குணசேகரன் மற்றும் சுகாதார அலுவலர்கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×