search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மதுரையில் விற்பனைக்கு வந்த வண்ணமய விநாயகர் சிலைகள்

    • மதுரையில் விற்பனைக்கு வந்த வண்ணமய விநாயகர் சிலைகள் ரூ.50 முதல் 50ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
    • இதனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுரை

    இந்துக்களின் முக்கிய பண்டி கையான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாட ப்படுகிறது. இந்த விழாவில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தி, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு அமலில் இருந்ததால் விநாயகர் சதுர்த்தி விழா பொது இடங்களில் நடைபெற வில்லை. அவரவர் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் அனுமதிக்கப்பட்டு ள்ளதால் விநாயகர் சிலைகளை வாங்க பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்காக மதுரையில் மாட்டுத்தாவணி, திருப்பரங்குன்றம், விளாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மாட்டுத்தாவணி பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வண்ணமயமான விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.

    இந்த சிலைகள் குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 50,ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதற்காக 15 அடி உயரம் வரை விநாயகர் சிலைகளும் தயார் செய்யப்படுகிறது. மேலும் பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைப்பதற்கு ஆர்டர் செய்தால் சிலைகளை தயார் செய்து கொடுப்பதாகவும் கைவினைஞர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆர்டர்களும் தற்போது அதிகமாக வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.மேலும் வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்காக சிறிய வடிவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு சிங்கம், மான், மயில் ஆகியவற்றின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலைகள் பொது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சிலைகளை ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.இந்த ஆண்டு சதுர்த்தி விழாவை ஒட்டி 3 நாட்கள் வழிபாடு செய்து பின்னர் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க தேவையான ஏற்பாடுகளையும், மதுரை மாவட்டத்தில் அதற்குரிய இடங்களையும் போலீசார் தீவிரமாக தேர்வு செய்து வருகிறார்கள்.

    மேலும் இந்து அமைப்பு கள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை பல்வேறு நிபந்தனைகளை அடிப்படையில் அனுமதிக்க வும் முடிவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×