search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வைகை கரையோரங்களை தீவிரமாக கண்காணிக்க கோரிக்கை
    X

    வைகை கரையோரங்களை தீவிரமாக கண்காணிக்க கோரிக்கை

    • வைகை கரையோரங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • ஜே.சி.பி. போன்ற எந்திரங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்போது மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. இன்னும் 4 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் வைகை அணை நிரம்பி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது, மதுரை மாவட்டத்தில் 75 சதவீத நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. அதனால் கரையோர மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாட்டை செய்ய வேண்டும்.

    அதேபோல் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் ராட்சத பம்புகள் மூலம் மழை நீரை வெளியேற்ற வேண்டும். பேரிடர் ஒத்திகை மட்டும் போதாது. நிலவரத்துக்கு ஏற்றார் போல் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் முதல்நிலை மீட்பாளர்களை அரசு தயார் நிலைப்படுத்த வேண்டும்.

    கடந்த மாதம்ஆற்றில் குளிக்கச் சென்ற ராணுவ வீரர் உட்பட சிலர் உயிரிழந்தனர். ஆகவே ஆற்றின் கரையோரங்களில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ அனுமதிக்காமல், கரையோரங்களை 24 மணி நேரமும் ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். அதேபோல் தொற்றுநோயை தடுக்கும் வகையில், மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். பாதிக்கப்படும் மக்களை முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு வேண்டிய தரமான உணவு, சுத்தமான குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளை அரசு செய்ய வேண்டும்.

    இந்த பருவ மழை காலங்களில் நீர்நிலை கரைகளை பலப்படுத்த தேவையான மணல் மூட்டைகளை தயாராக வைத்திருக்க வேண்டும். அதேபோல் ஜே.சி.பி. போன்ற எந்திரங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×