search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 2-ம் நாளான இன்று நாரைக்கு முக்தி கொடுக்கும் லீலையில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை

    • ஆவணி மூலப் பெருந்திருவிழாவில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 2-ம் நாளான இன்று நாரைக்கு முக்தி கொடுக்கும் லீலையில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யப்படும். இதனைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர், 8 மாத காலம் ஆட்சி செய்வதாக பக்தர்கள் நம்பிக்கை. விழாவின்போது சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில், 12 லீலைகள் அரங்கேற்றம் செய்யப்படும். அதன்படி நேற்று சிவபெருமான் கருங்குயிலுக்கு உபதேசம் வழங்கிய லீலை நடந்தது. 2-ம் நாளான இன்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை நடந்தது. மீனாட்சி அம்மன்- பிரியாவிடை சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். நாளை மாணிக்கம் விற்ற லீலை நடக்க உள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா 9-ம் தேதி வரை நடக்க உள்ளது. மதுரையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆவணி மூல திருவிழா நடக்கவில்லை. இந்த நிலையில் பக்தர்களின் பங்களிப்புடன் ஆவணி மூலத் திருவிழா நடப்பாண்டு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×