search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பாராளுமன்ற நிலை குழுவினர் கனிமொழி தலைமையில் ஆய்வு
    X

    மதுரை மாநகராட்சி மண்டலம்-2 சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின்கீழ் பள்ளி குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கு வதை நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் கனிமொழி தலைமையில், நிலைக்குழு உறுப்பி னர்கள் பார்வையிட்டனர். அருகில் மேயர் இந்திராணி, ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் தியாகராஜன், மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி, கல்விக் குழு தலைவர் ரவிச்சந்தி ரன், மாமன்ற உறுப்பினர் பாண்டீஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

    பாராளுமன்ற நிலை குழுவினர் கனிமொழி தலைமையில் ஆய்வு

    • மதுரை மாவட்டத்தில் பாராளுமன்ற நிலை குழுவினர் கனிமொழி தலைமையில் ஆய்வு நடத்தினர்.
    • சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் பாராளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவர் கனிமொழி எம்.பி. தலைமை யில், குழு உறுப்பினர்கள் மதுரை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி கிராமத்தில் களிமண் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் கனிமொழி கலந்துரையாடி னார். தொடர்ந்து மதுரை யானைமலை ஒத்தக்கடை யில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் உள்ள விவசாய தொழில் முனைவோர் பாதுகாப்பு மையத்தை பார்வை யிட்டனர்.

    பின்னர் சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் கனிமொழி கூறியதாவது:-

    ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் தொடங்கி மதுரை மாவட்டம் வரை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து வருகிேறாம். இந்த ஆய்வின் போது களிமண் பொம்மை தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    அந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதனை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுகளின் போது கலெக்டர் சங்கீதா, நாடாளுமன்ற இயக்குநர் கல்யாண சுந்தரம், நாடாளுமன்ற நிலைக்குழு அலுவலர் சுனில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×