search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கப்பலூர் சுங்கச்சாவடியை  உடனடியாக அகற்ற வேண்டும்
    X

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும்

    • கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என திருமங்கலம் ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் கைலாசம், கிராம ஊராட்சி சவுந்தரராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் லதா ஜெகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் மக்கள் நலத்திட்டங்களுக்கு பொது நிதி ஒதுக்கீடு செய்யப்பட வில்லை என குற்றம் சாட்டினர்.

    இதுகுறித்து முறையான தகவல் தெரிவிக்கப்படாததால் அதிகாரிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்படுவ தாகவும் கவுன்சிலர்கள் கூறினர். கூட்டத்தில் பா.ஜனதா கவுன்சிலர் மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டம் திருமங்கலம் பகுதியில் முறையாக செயல்படுத்தப்படவில்லை என கூறினார்.

    மேலும் இத்திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது அதிகாரிகள் ஜல்ஜீவன் திட்டத்திற்கு போதுமான நிதி இருந்தால் மட்டுமே அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் வழங்க முடியும் என தெரிவித்தனர். தமிழக அரசு அறிவித்துள்ள அக விலைப்படி உயர்வுக்கு நன்றி தெரிவித்து கவுன்சிலர் முத்துப்பாண்டி பேசினார்.

    திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இடையூறாக உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடி யாக அகற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் செல்வம், மின்னல் கொடி ஆண்டிச்சாமி ஆகியோர் வலியுறுத்தினர்.

    அ.தி.மு.க. ஒன்றிய தலைவர் லதா ஜெகன், துணை சேர்மன் வளர்மதி அன்பழகன் மற்றும் அனைத்து கவுன்சிலர் களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடி யாக அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் கைலாசம், கிராம ஊராட்சி சவுந்தரராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×