search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ராபவுர்ணமி வழிபாட்டிற்கு கூடுதல் வசதிகள் - கலெக்டர் ஷஜீவனா தகவல்
    X

    ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ராபவுர்ணமி வழிபாட்டிற்கு கூடுதல் வசதிகள் - கலெக்டர் ஷஜீவனா தகவல்

    • தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் வருகிற மே மாதம் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட உள்ளது.
    • கண்ணகி கோவில் வழிபாடு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளுடனும் கலெக்டர் தலைமையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    தேனி:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் வருகிற மே மாதம் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனைமுன்னிட்டு இடுக்கி, தேனி மாவட்ட கலெக்டர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்ததாவது,

    மங்கலதேவி கண்ணகி கோவிலின் விழா சிறப்பாக கொண்டாட இரு மாநில மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு அலுவலர்க ளுடனும், கண்ணகி கோவில் அறக்கட்டளை நிர்வாகி களுடனும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், இந்த ஆண்டு மங்கலதேவி கண்ணகி கோயில் விழா சிறப்பாக நடைபெறுவத ற்கான அனைத்து அடிப்ப டை வசதிகள் செய்து தரப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலை 6 மணிமுதல் மதியம் 2 மணி வரை கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்க ப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு காலை 6.00 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு ள்ளது.

    பக்தர்கள் கோவிலில் இருந்து கீழே செல்வதற்கு மாலை 5.00 மணி வரை அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு மாலை 5.30 மணிக்குள் கீழே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் அனைத்து பக்தர்களும் வழிபாடு செய்திட ஏதுவாக வும், பக்தர்களின் பாது காப்பிற்காகவும், சுற்றுச்சு ழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பிளாஸ்டிக், எளிதில் தீப்பற்றக்கூடிய பொரு ட்களை எடுத்து செல்வதற்கு சில கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் பாதுகாப்புடன் எவ்வித சிரமமின்றி மங்கலதேவி கண்ணகி கோயிலில் வழிபாடு செய்து திரும்பும் பொருட்டு வாக னங்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கும் வகையில்வாகன தரச்சான்றிதழ் மே 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை மாலை 5 மணிக்கு வழங்க ப்படவுள்ளது. ஒரு முறை அனுமதிச்சீட்டு பெற்றால் போதுமானது. அதனை அன்றைய தினம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடந்தாண்டு 16,000 பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கு கடந்த முறை 6 கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது, இந்தாண்டு கூடுதலாக 6 கழிப்பறைகள், கூடுதலாக குடிநீர் வசதிகள், வழி நெடுகிலும் பாதுகாப்பு வசதிகள், கடந்தாண்டை விட இந்தாண்டு பக்தர்களின் வருகை அதிக அளவில் இருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதை கருத்தில் கொண்டு, கூடுதலாக கழிப்பறை, குடிநீர், பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், பளியன்குடி வழியாக வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. திருவிழாவினை சிறப்பாக கொண்டாடிட அனைத்து பக்தர்களும் இரு மாநில மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×