search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்கலதேவி கண்ணகி கோவில் : சித்ராபவுர்ணமியையொட்டி பளியங்குடியில் இன்று கொடியேற்றம்
    X

    சித்ரா பவுர்ணமி திருவிழா கொடியேற்றம் இன்று பளியங்குடியில் நடைபெற்றது.

    மங்கலதேவி கண்ணகி கோவில் : சித்ராபவுர்ணமியையொட்டி பளியங்குடியில் இன்று கொடியேற்றம்

    • மங்கலதேவி கண்ணகி கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி திருவிழா வருகிற மே 5-ம் தேதி ( வெள்ளிக்கிழமை ) கொண்டாடப்படுகிறது.
    • இன்று பளியன் குடியிருப்பு பகுதியில் சித்ரா பவுர்ணமி கொடியேற்றும் விழா நடைபெற்றது.

    கூடலூர்:

    தமிழக கேரளா எல்லையில் கூடலூரின் 21-வது வார்டு பகுதியான பளியங்குடியிருப்புக்கு மேலே மங்கல தேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இதை மங்கல தேவி கண்ணகி கோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

    பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் கண்ணகி தெய்வம் தினமான சித்ராபவுர்ணமி அன்று விழா நடத்தப்பட்டு வருகிறது. காலம் மாற்றத்தால் இந்தக் கோவில் பழுதடைந்து தற்போது சேதம் அடைந்து காட்சி அளிக்கிறது.

    தமிழககேரளா எல்லையில் மழை உச்சியில் இந்த கோவில் அமைந்துள்ளதால் இப்பகுதியில்இருந்து தமிழக வனப்பகுதியின் செழுமையையும் , முல்லைப் பெரியாறு அணையின் அழகான தோற்றத்தையும் காணலாம்.

    கடந்த காலங்களில் தமிழக பக்தர்கள் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியங்குடியிருப்பு பகுதியில் இருந்து 6 கி.மீ. தூரம் கோவிலுக்கு நடந்து சென்று வழிபட்டனர். மேலும் கேரள மாநிலம் குமுளியிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் வனப்பகுதி வழியாக செல்ல சாலை வசதி உள்ளது.

    ஆனால் வனத்துறையினர் இந்த சாலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி அளிக்கின்றனர். ஒரு வாரம் கொண்டாடப்பட்ட கண்ணகி கோவில் திருவிழா தற்போது சித்ரா பௌர்ணமி அன்று ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி திருவிழா வருகிற மே 5-ம் தேதி ( வெள்ளிக்கிழமை ) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை பளியன் குடியிருப்பு பகுதியில் சித்ரா பவுர்ணமி கொடியேற்றும் விழா நடைபெற்றது.

    பச்சை மூங்கிலில் கண்ணகி உருவம் பொறித்த மஞ்சள் நிறம் கொண்ட கொடி ஏற்றப்பட்டது முன்னதாக கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் கூடலூர் கம்பம் மங்கலதேவி கண்ணகி கோட்ட அறக்கட்டளை செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சரவணன், நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கற்கண்டு, பொங்கல், அவல் பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×