என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போடியில் மா விவசாயம் பாதிப்பு: செல்பூச்சி தாக்குதலால் விவசாயிகள் கவலை
- பூக்கள் முற்றிலும் கருகி, பாசி என்னும் பிஞ்சுகள் அனைத்தும் வாடி உதிர்ந்து மரம் முழுவதும் வெறும் குச்சிகளாக மட்டுமே காட்சி அளித்து வருகிறது.
- மாங்காய் விளைச்சலில் பல்லாயிரக்கணக்கான கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்று விவசாயிகள் வேதனை அடைந்தள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதிகளில் சுமார் 25000 ஏக்கருக்கு மேல் மா சாகுபடி நடைபெற்று வருகிறது.
முற்றிலும் மலைகள்சூ ழ்ந்த பகுதிகளில் பெரும்பா லும் இயற்கை நன்னீர் விவசாயத்தில் உற்பத்தியா வதால் தரத்திலும் சுவை யிலும் தென்னிந்தியா விலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்பகுதி மாங்காய் உள்ளது.
கல்லா மாங்காய், பந்தானவள்ளி, காதர், செந்தூரம், கிளி மூக்கு, மல்கோவா, சப்பட்டைகாசா, இமாம் பசந்த், போன்ற முதல் வகை ஏற்றுமதி ரக மாம்பழங்கள் இப்பகுதியில் அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் விளையும் மாங்காய் மற்றும் மாம்பழங்கள் பல்வேறு அயல் நாடுகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதிசெய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் மாம்பழ விளைச்சல் மற்றும் விற்பனை அதிகளவில் நடைபெறும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்த சூழலில், திடீரென்று ஏற்பட்ட வினோதமான செல் பூச்சி தாக்குதலால் விவசாயிகளின் கனவுகள் கலைந்து போனது.
பூக்களிடையே உற்பத்தியான செல் பூச்சிகளால் மரத்தில் உள்ள பூக்கள் முற்றிலும் கருகி, பாசி என்னும் பிஞ்சுகள் அனைத்தும் வாடி உதிர்ந்து மரம் முழுவதும் வெறும் குச்சிகளாக மட்டுமே காட்சி அளித்து வருகிறது.
பல்வேறு பூச்சி மருந்துகள் உரங்கள் இட்டும் மரத்தில் உற்பத்தியான செல் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு விலை அதிகம் இருந்தும் அளவான விளைச்சல் இருந்ததால் ஓரளவிற்கு விவசாயிகள் தாக்கு பிடித்தனர்.
ஆனால் இந்த ஆண்டு நல்ல விளைச்சலும் விலையும் கிடைக்கும் என்று எதிர்பார்த்த சூழ்நிலையில் திடீரென்று மரங்களை பாதித்த வினோதமான செல் பூச்சிகள் தாக்குதலால் விளைச்சல் முற்றிலும் சரிந்து, விவசாயிகளும் குத்தகைதாரர்களும் வியாபாரிகளும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகள் குத்தகைதாரர்கள் வியா பாரிகள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் லாரி உரிமை யாளர்கள் தொழிலாளிகள் மிகப்பெரும் வருமான இழப்பை சந்தித்து வரு கின்றனர்.
தற்பொழுது ஏற்பட்டு ள்ள செல் பூச்சி தாக்குதல் மாங்காய் விளைச்சலில் பல்லாயிரக்கணக்கான கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு வேளாண் துறை மூலம் உரிய நட வடிக்கை எடுத்து மாமரங்களில் ஏற்பட்டுள்ள செல் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகளும் குத்தகை தாரர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்