search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மஞ்சூர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா
    X

    மஞ்சூர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா

    • கடந்த 3-ந் தேததி கொடியேற்றத்துடன் கோவில் திருவிழா தொடங்கியது.
    • 10-ந் தேதி குந்தாபாலம் ஆற்றில் இருந்து கம்பம் கொண்டு வரப்பட்டது.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் வருடாந்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்நிலையில் நடப்பாண்டு 50ம் ஆண்டை முன்னிட்டு பொன்விழா ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 3-ந் தேததி கொடியேற்றத்துடன் கோவில் திருவிழா தொடங்கியது.

    தொடர்ந்து தினசரி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10-ந் தேதி குந்தாபாலம் ஆற்றில் இருந்து கம்பம் கொண்டு வரப்பட்டது.

    இதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் குந்தா சிவன் கோவிலில் இருந்து மேள, தாளங்களுடன் கரகம் எடுத்து வரப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டிகளை ஏந்தி குந்தாபஜார், பழைய தாலுகா அலுவலகம், மின்வாரிய மேல்முகாம் வழியாக மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

    இதை தொடர்ந்து பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் மஞ்சூர், மஞ்சூர்அட்டி, மணிக்கல், கண்டிபிக்கை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டதுடன் படுகரின மக்களின் கலாச்சார நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து நேற்று கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், மாவி ளக்கு ஊர்வலம் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×