என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மசாஜ் தொழிலாளர்கள் சங்க கூட்டம்
- மசாஜ் தொழிலாளர்கள் சங்க ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது.
- புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஏ.ஐ.டி.யூ.சி .மசாஜ் தொழிலாளர்கள் சங்க ஆண்டு பேரவை கூட்டம் மாதேஷ் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மசாஜ் தொழிலாளர்கள் சங்கம் ஆண்டு பேரவை கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர்மணி கலந்து கொண்டு சங்க செயல்பாடுகள் குறித்து விளக்க உரையாற்றினார்.
சங்கத்தின் கவுரவ தலைவர்,வழக்கறிஞர் மாதையன்,முன்னாள் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டத்தலைவர் மாதேஸ்வரன், கட்டுமான தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.
ஆண்டு பேரவை கூட்டத்தில் ஒகேனக்கல் ஏ.ஐ.டி.யூ.சி. மசாஜ் தொழிலாளர்கள் சங்க தலைவராக மாதேஷ்,துணைத் தலைவர்களாக விஜயகாந்த், மாது ,செயலாளராக கோ.சந்திரசேகர்,துணை செயலாளராக பாரதிராஜா, பொருளாளராக பாபு மற்றும் சங்கத்தின் கௌரவத் தலைவராகவும், சட்ட ஆலோசகராகவும் வழக்கறிஞர் மாதையன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் மசாஜ் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை புதுப்பித்து வழங்க வேண்டும்,மசாஜ் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்,மசாஜ் தொழிலாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.