search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம்
    X

    வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் பழனிசாமி, அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய போது எடுத்த படம்.அருகில் கலெக்டர் சாந்தி உள்ளதை படத்தில் காணலாம்.

    அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம்

    • வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் பழனிசாமி பங்கேற்பு
    • வரும் 18,19-ம் தேதிகளில் தேதிகளில் முகாம் நடக்கிறது.

    தருமபுரி,

    இந்தியதேர்தல் ஆணை யத்தின்ஆணையின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 ஆம் ஆண்டுக்கான பணியினை மேற்பார்வையிடுவதற்கு தருமபுரி மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வை யாளர் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர்நல ஆணையர் பழனிசாமி தலைமையில், மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சிகளின் பிரதிநிதி களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வை யாளர் பழனிசாமி பேசியதாவது;-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தர வின்படி, தருமபுரி மாவட்டத்தில் வாக்கா ளர்பட்டியல்-2024 சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடைபெற்று வருகின்றது. 1.1.2024தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், மற்றும் 17 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகை யில் இன்று மற்றும் 18.11.2023 மற்றும்19.11.2023 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) தேதிகளில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்க ளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறு கின்றது.

    சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024-ல் பெறப்படும் படிவங்கள் குறித்தும், களப்பணி குறித்தும், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் மேல்த ணிக்கை செய்யப்பட்ட சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான படி வங்கள் குறித்தும் விவா திக்கப்பட்டது.

    பொதுமக்கள் மேற்கண்ட வசதிகளை தங்கள் வீடுகளிலிருந்தே பெற www.nvsp.in என்ற இணையதள முகவரியில், Apply Online/Correction of entries என்ற Link மூலமும்வி ண்ணப்பிக்கலாம். மேலும், செல்போனில் Voters Helpline App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்க உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட அறிவுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய் கோட்டாட் சியர்கள் கீதா ராணி (தருமபுரி), திரு.வில்சன் ராஜசேகர் (அரூர்)மற்றும் தேர்தல் தனி வட்டாட்சியர் அசோக் குமார், அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளனர்.

    Next Story
    ×