search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மெகா தடுப்பூசி முகாம்- கலெக்டர் தகவல்
    X

    நாளை மெகா தடுப்பூசி முகாம்- கலெக்டர் தகவல்

    • அரசு தடுப்பூசி மையங்களில் சுகாதார பணியாளர்கள், முன் களபணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் ஊக்குவிப்பு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
    • 14.7.2022 வரை 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் உரிய கட்டணத்துடன் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் பொருட்டு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் , அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை 19,98,458 பயனாளிகளுக்கு முதல் தவணையும் 18,74,807 பயனாளிகளுக்கு இரண்டாம் தவணையும், 39,983 பயனாளிகளுக்கு ஊக்குவிப்பு தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. அரசு தடுப்பூசி மையங்களில் சுகாதார பணியாளர்கள், முன் களபணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் ஊக்குவிப்பு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

    14.7.2022 வரை 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் உரிய கட்டணத்துடன் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

    தற்போது 15.7.22 முதல் 30.9.22 தேதி வரையிலான 75 நாட்களுக்கு 18 வயதிற்கு மேல் 59 வயதிற்குள்ளான பயனாளிகளுக்கு இலவசமாக அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் , துணை சுகாதார நிலையங்கள் , அங்கன்வாடி மையங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

    பொது மக்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் நடைபெற உள்ள 32-வது மெகா தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தகுதியுள்ள அனைவரும் தவறாது தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் பாதுகாத்துகொள்ள வேண்டுமாய் கேட்டு க்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×