search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மேட்டுப்பாளையத்தில் 60 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தம்
    X

    மேட்டுப்பாளையத்தில் 60 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தம்

    • தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கிழங்கு மண்டிகள் என பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தினசரி சுமார் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் வந்து சென்று வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வங்கிகள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கிழங்கு மண்டிகள் என பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மேலும் மேட்டுப்பாளையம் நகர பகுதியில் வெளியூர்களுக்கு சென்று வரும் வகையில் அரசு பஸ் நிலையமும் உள்ளது.

    இதனால் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தினசரி சுமார் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் வந்து சென்று வருகின்றனர்.

    இதனால் மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் செயின் பறிப்பு, அடிதடி, வாகன திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.இதில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினருக்கு கடும் சிரமம் இருந்து வந்தது.

    இதனிடையே தற்போது மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் சார்பில் மொத்தம் 58 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    இதனிடையே நேற்று மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் சிறுமுகை சாலை முதல் சிராஜ் நகர் நேஷனல் பள்ளி வரை 30 காமிராக்களும், மேட்டுப்பாளையம் பழைய நகராட்சி அலுவலகம் முதல் மீனாட்சி வரை 30 காமிராக்கள் என மொத்தம் 60 கண்காணிப்பு காமிராக்கள் ரூ.8 லட்சம் மதிப்பில் பொருத்தப்பட்டுள்ளன.

    இதற்கான பணிகள் முடிந்ததை அடுத்து கண்காணிப்பு காமிராக்களை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதில் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி.பாலாஜி, இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகநாதன், செல்வநாயகம் உள்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர். இதற்கான செலவுகளை என்.எஸ்.வி பூண்டு மண்டி உரிமையாளர் ஆறுமுகம் யு.பி.எல் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

    Next Story
    ×