search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தூத்துக்குடி மாநகராட்சி 8-வது வார்டு பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகள் கேட்ட அமைச்சர் கீதாஜீவன்
    X

    அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்ட போது எடுத்த படம்.

    தூத்துக்குடி மாநகராட்சி 8-வது வார்டு பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகள் கேட்ட அமைச்சர் கீதாஜீவன்

    • தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக அமைச்சர் கீதாஜீவன் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
    • பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டு அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் 8-வது வார்டுக்குட்பட்ட சிறுமலர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் பேசுகையில், இந்த பகுதிக்கு தி.மு.க. ஆட்சி வந்த பிறகு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இந்தபகுதியில் குறைகேட்க வந்தபோது நீங்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் புதிய தார்சாலை, குடி தண்ணீர் குறைபாடுகள் தீர்க்கப்பட்டு சீரான குடி தண்ணீர், இனி வரும் காலங்களிலும் அனைத்து பகுதிகளுக்கும் அமைக்கப்படாமல் உள்ள சாலைகள் முழுமையாக அமைத்து கொடுக்கப்படும்.

    மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் முறையாக நடை பெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டு அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன். விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.

    இதில், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் தினேஷ்குமார், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், உதவி செயற் பொறியாளர் பிரின்ஸ், கவுன்சிலர் பவாணி மார்ஷல், வட்டச்செயலாளர் ரவிசந்திரன் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×