என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
- சென்னை உயா்நீதிமன்ற வழக்கு காரணமாக நீண்ட காலமாக தொடங்கப்படாமல் இருந்த கட்டுமானப் பணிகள், தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையால் தொடங்கப்பட்டது.
- திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 3.50 லட்சம் தொழிலாளா்கள் பயனடைவாா்கள்.
திருப்பூர் :
திருப்பூா் திருமுருகன்பூண்டி-பூலுவப்பட்டி சுற்றுச்சாலையில் 7.46 ஏக்கரில் ரூ.74 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சா்கள் சி.வி.கணேசன், மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதன் பின்னா் அமைச்சா் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அதிக அளவு தொழிலாளா்கள் வசிக்கும் மாவட்டமாக திருப்பூா் உள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்ற வழக்கு காரணமாக நீண்ட காலமாக தொடங்கப்படாமல் இருந்த கட்டுமானப் பணிகள், தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையால் தொடங்கப்பட்டு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த மருத்துவமனையானது தரைத் தளம் 4,464.67 சதுர மீட்டா் பரப்பளவு, முதல் தளம் 4,566 சதுர மீட்டா் பரப்பளவு, இரண்டாம் தளம் 3,790.68 சதுர மீட்டா் பரப்பளவு உள்பட மொத்தம் 13,106.80 சதுர மீட்டா் பரப்பளவில் 100 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் குடிநீா் வசதி, கழிவறை வசதி, மின்தூக்கி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 2023 மே மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.இதன் மூலமாக திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 3.50 லட்சம் தொழிலாளா்கள் பயனடைவாா்கள் என்றாா்.
இந்த ஆய்வின்போது, திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத், திருப்பூா் தெற்கு சட்டமன்ற உறுப்பினா்செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா்பாலசுப்பிரமணியம், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மலா்கொடி, இ.எஸ்.ஐ.கோவை மண்டல இயக்குநா் ரகுராமன், திருப்பூா் கிளை மேலாளா் திலீப் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்