என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொன்னேரியில் மாயமான சிறுவன் பெங்களூருவில் மீட்பு
- மாயமான சிறுவன் ராஜ் பால் பாக் பெங்களூருவில் இருப்பது தெரிந்தது.
- மீட்கப்பட்ட ராஜ் பால் பாக்கிற்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த காட்டாவூர் கிராமத்தில் கொய்யா பண்ணை உள்ளது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கொரியாபா குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராஜ் பால் பாக் (15).
கடந்த 18-ந்தேதி பண்ணையில் இருந்து வெளியே சென்ற ராஜ் பால் பாக் பின்னர் திரும்பி வரவில்லை. அவன் மாயமாகி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்
இதற்கிடையே மாயமான சிறுவன் ராஜ் பால் பாக் பெங்களூருவில் இருப்பது தெரிந்தது. போலீசார் அவனை மீட்டனர்.
சம்பவத்தன்று தந்தை திட்டியதால் கோபம் அடைந்த அவன், பொன்னேரியில் இருந்து சென்ட்ரல் சென்று அங்கிருந்து ரெயில் மூலம் பெங்களூரு சென்று உள்ளான்.
பின்னர் ரெயில் நிலையத்தில் இருந்து எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்த அவனை பெங்களூரு போலீசார் விசாரித்து அங்குள்ள காந்தி ஆசிரமத்தில் சேர்த்து இருந்தது தெரிந்தது. மீட்கப்பட்ட ராஜ் பால் பாக்கிற்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.