search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூரில் நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க வேண்டும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நகராட்சி தலைவர் கோரிக்கை
    X

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் சால்வை அணிவித்த காட்சி.

    கடையநல்லூரில் நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க வேண்டும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நகராட்சி தலைவர் கோரிக்கை

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
    • கடையநல்லூரில் 2 இடங்களில் நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க வேண்டும் என மனு வழங்கினார்.

    கடையநல்லூர்:

    தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து அவரை கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது கடையநல்லூரில் விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களின் நலன் கருதி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடையநல்லூரில் 2 இடங்களில் பெரிய அளவில் விளையாட்டு மைதானங்களும், நவீன விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    Next Story
    ×