search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசாரிடம் தாய் புகார்

    • தருமபுரி அருகே மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்
    • மனைவியிடம் போலீசார் விசாரணை

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள இந்திரா நகர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் ராதாமணி மகன் ராஜா (வயது 40). லாரி டிைரவர்.இவருக்கு கனகா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆன நிலையில் 14 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்து தனியாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் ராஜா கடந்த 30-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வரட்டாறு கால்வாய் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க செல்லும் போது ராஜா பிணமாக கிடந்தார்.

    அவரது உடலில் பல்வேறு பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் இருந்ததை பார்த்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜா வின் உடலை கிராமத்தினர் அவரது வீட்டிற்கு கொண்டு சென்றதாக தெரிகிறது. அங்கு தனது கணவரின் உடலை பிணமாக கொண்டு வருவதை கண்டு ராஜாவின் மனைவி கனகா கதறி அழுதார்.

    இதுகுறித்து அரூர் போலீசாருக்கும் மற்றும் வருவாய் துறைக்கும் தகவல் தெரிவிக்கலாம் என்று கிராம மக்கள் சொல்லிய போது அவரது மனைவி கனகா மறுப்பு தெரிவித்த நிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இதுகுறித்து ராஜாவின் தாயார் ராதாமணி அரூர் போலீஸ் நிலையத்தில் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்து உயிரிழப்புக்கு காரண மானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் என்று கூறி புகார் கொடுத்துள்ளார்.

    புகாரை பெற்றுக் கொண்ட போலீசர் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்த நிலை யில் போலீஸ் அவசர கட்டுப்பாட்டுக்கு தகவல் கொடுத்த பிறகு அந்த தகவலின் பெயரில் அரூர் போலீசார் தற்போது புகாரை பெற்றுக் கொண்டு மர்மமான முறையில் உயிரிழந்த ராஜாவின் மனை வியை விசாரணைக்காக அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

    மேலும், ராஜாவின் சாவுக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது தாயார் ராதாமணி மற்றும் உறவினர்கள, இந்திரா நகரைச் சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் போலீஸ் நிலையம் முன்பு காத்திருந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×