search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் நகரில் சேறும், சகதியுமாக காணப்படும் சாலைகள்- பேரூராட்சி மன்ற அலுவலகம் முன்பு கழிவு நீர் தேங்கி நிற்கின்றது
    X

    பேரூராட்சி மன்ற அலுவலகம் முன்பு கழிவுநீர் தேங்கி சகதியாக உள்ளது.

    சாத்தான்குளம் நகரில் சேறும், சகதியுமாக காணப்படும் சாலைகள்- பேரூராட்சி மன்ற அலுவலகம் முன்பு கழிவு நீர் தேங்கி நிற்கின்றது

    • மழை நீர் தேங்கி சாலைகளில் ஓடுவதால் பல சாலைகளில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
    • பேரூராட்சி மன்ற அலுவலகம் எதிரிலே கழிவுநீர் தேங்கி சேறும், சகதியாக உள்ளது என பொதுமக்கள் பார்த்து ஆதங்கப்பட்டு செல்கின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.

    சேறு-சகதி

    இந்த வார்டுகளில் உள்ள கழிவுநீர் சானல்களில் மழை நீர் தேங்கி சாலைகளில் ஓடுவதால் பல சாலைகளில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. நடந்து செல்பவர்களும் வாகனங்களில் செல்பவர்களும் சற்று கவனக்குறைவாக சென்றால் சகதியில் சிக்கி வழுக்கி கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.

    மேலும் பல வார்டுகளில் உள்ள சாலைகளிலும், மெயின் பஜார் சாலைகளிலும் உள்ள கழிவுநீர் சானல்கள் பாதி அளவு கட்டப்பட்டு பாதி அளவு உடைந்து போன நிலையில் உள்ளதால் சானலில் தேங்கும் கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    பேரூராட்சி நிர்வாக த்தினர் இது குறித்து கண்டு கொள்ளவே இல்லை. உடைந்து போன பல கழிவுநீருக்கானல்களை சிமெண்டால் பூசி இன்னும் சரி செய்யப்படவில்லை. மேலும் சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற அலுவலகம் உள்ள மேல சாத்தான்குளம் சாலைகளின் இரு கரையோரங்களில் சேறும், சகதியுமாக உள்ளது. மேலும் பேரூராட்சி மன்ற அலுவலகம் எதிரிலே கழிவுநீர் தேங்கி சேறும், சகதியாக உள்ளது என பொதுமக்கள் பார்த்து ஆதங்கப்பட்டு செல்கின்றனர்.

    குறைகளை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளுடைய கவனத்திற்கு கொண்டு சென்றால் அது குறித்து நடவடிக்கை எடுக்காமல் கண்டு கொள்வதே இல்லை. தொடர்ந்து இப்படி சானல்கள் உடைபட்டு கொண்டு இருந்தால் சாத்தான்குளம் நகரிலுள்ள கழிவுநீர் சானல்களில் தேங்கியுள்ள கழிவு நீர் அனைத்தும் சாலைகளில் தேங்கி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என பொதுமக்கள் குறை கூறி வருகின்றனர்.

    பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக உடைபட்ட கானல்களின் பாதைகளை சிமிண்டால் கட்டி சீரைமைக்கா விட்டால் 15வார்டு பொதுமக்களையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று நகர ம.தி.மு.க. செயலாளர் ஜெயராஜன் கூறியுள்ளார்.

    Next Story
    ×