என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொடர்ந்து சரியும் பெரியாறு அணை நீர்மட்டம் : தேக்கடி ஏரியில் மூழ்கிய மரங்கள் வெளியே தெரியும் நிலை
- முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவுகிறது.
- நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் தேக்கடி ஏரியும் வறண்டு வருகிறது.
கூடலூர்:
முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவுகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. பருவமழையின் போது 142 அடிவரை உயர்ந்த நீர்மட்டம் தற்போது வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115.90 அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. அணையின் இருப்பு 1889 மி.கனஅடியாக உள்ளது.
நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் தேக்கடி ஏரியும் வறண்டு வருகிறது. இதனால் ஏரிக்குள் மூழ்கிஇருந்த மரங்கள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை கைகொடுத்தால்மட்டுமே மீண்டும் அணையின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 54.09 அடியாக உள்ளது. அணைக்கு 14 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 59.77 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 1.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.