search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.200-க்கு விற்பனை
    X

    நாமக்கல்லில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.200-க்கு விற்பனை

    • காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்கத்து மாவட்டங்க ளில் இருந்தும் அதிகளவில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • நாமக்கல்லில் அதிகபட்ச மாக ரு. 140 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்கத்து மாவட்டங்க ளில் இருந்தும் அதிகளவில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தக்காளி விலை

    இந்த நிலையில் தமி ழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. நாமக்கல்லில் அதிகபட்ச மாக ரு. 140 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.

    இதனால் ஏழை, மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தக்காளி வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான வீடுகளில் தக்காளி வாங்குவதை நிறுத்தி விட்டனர். விலை குறைவாக விற்கப்பட்ட போது கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி சென்ற பொதுமக்கள் தற்போது விலை உயர்வின் காரணமாக கிராம் கணக்கில் தக்காளியை வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    தங்கத்தை போல் தக்காளி விலையும் தினமும் அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. ஆனாலும் முதல் ரக தக்காளி 100 ருபாய்க்கு கீழ் குறையாமல் இருந்து வருகிறது.

    ரூ.200-க்கு விற்பனை

    நாமக்கல்லில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்ப தால் இதுவரை இல்லாத அளவுக்கு தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் பார்க் ரோடு பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி ரூ.200-க்கு விற்கப்பட்ட தால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் நாமக்கல் உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்டது. அதுவும் சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்து விட்டது.

    சேலம்

    இதேபோல் சேலத்தில் இன்று 1 கிலோ தக்காளி ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×