search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை கலெக்டர் உமா ஆய்வு
    X

    கொசவப்பட்டி ஏரியில் கால்வாய் தூர்வாரும் பணியினை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

    நாமக்கல் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை கலெக்டர் உமா ஆய்வு

    • நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கமலாலயம் குளத்தில் நாணல் புற்கள் வளர்ந்துள்ளதை அகற்றி சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும் அவர் பார்வையிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பருவமழை துவங்க உள்ள நிலையில், நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள ஆர்.பி.புதூர் குட்டை தெரு, பூங்கா சாலை, கொசவம் பட்டி ஏரி ஆகிய இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, வடிகால் தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    நாமக்கல் நகராட்சி பூங்கா சாலை அருகே மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கமலாலயம் குளத்தில் நாணல் புற்கள் வளர்ந்துள்ளதை அகற்றி சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும் அவர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஆர்.பி.புதூர் குட்டை தெருவில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், மழை நீர் வடிகால் கட்டமைப்பு களை தூர்வாரி, மழைக்கா லங்களில் மழைநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    பின்னர் கொசவம்பட்டி ஏரியில் கால்வாய் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு, மழை தொடங்கும் முன் பணியை முடிக்க வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்தினார்.

    அதைத்தொடர்ந்து, நாமக்கல் உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், உழவர் சந்தையினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என அலுவலரை அறிவுறுத்தினார். ஆய்வின் போது, நாமக்கல் நகராட்சி ஆணையர் சென்னுகி ருஷ்ணன், நகராட்சி பொறி யாளர் சுகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×