என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஈஷாவில் நவராத்திரி திருவிழா தொடங்கியது- தினமும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்
- லிங்கபைரவி தேவியின் எல்லையில்லா அருளையும் சக்தியையும் உணர நவராத்திரி நாட்கள் மிகச் சிறந்த காலகட்டமாய் உள்ளது.
- செப்.29 மற்றும் அக்.2 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு மஹா ஆரத்தி நடைபெறும்
கோவை:
நம் வாழ்வின் ஒரு அங்கமாக விளங்கும் பெண் தன்மையை கொண்டாடும் நவராத்திரி திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று (செப்.26) கோலாகலமாக தொடங்கியது.
நம் கலாச்சாரத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் அனைத்துமே தனி மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கான கருவியாகவே அமைகிறது. அந்த வகையில், நவராத்திரி திருவிழா தனிச் சிறப்புமிக்க ஒரு கொண்டாட்டமாகும். ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவியின் எல்லையில்லா அருளையும் சக்தியையும் உணர நவராத்திரி நாட்கள் மிகச் சிறந்த காலகட்டமாய் உள்ளது.
அந்த வகையில், நவராத்திரியின் முதல் நாளான நேற்று லிங்கபைரவி தேவி துர்கையின் அம்சத்தை குறிக்கும் விதமாக குங்கும அபிஷேகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் தேவியின் உற்சவ மூர்த்தி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நந்தியின் முன் மஹா ஆரத்தி நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதேபோல், லிங்க பைரவி தேவி செப்.29 முதல் அக்.1 வரை லட்சுமியின் அம்சத்தை குறிக்கும் விதமாக மஞ்சள் அபிஷேகத்திலும், அக்.2 முதல் 4 வரை சரஸ்வதியின் அம்சத்தை குறிக்கும் விதமாக சந்தன அபிஷேகத்திலும் காட்சியளிப்பார். மேலும், செப்.29 மற்றும் அக்.2 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு மஹா ஆரத்தி நடைபெறும்.
இதுதவிர, இவ்விழாவை மேலும் சிறப்பிக்கும் விதமாக பாரம்பரிய இசை மற்றும் நடன கலைஞர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் தினமும் மாலை 6.30 மணி முதல் 7.45 மணி நடைபெறும். முதல் நாளான நேற்று ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 'த்ரிநயணி' என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்தினர்.