search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே   வனத்துறை அதிகாரி வீட்டில்  நகைகள் கொள்ளை
    X

    கிருஷ்ணகிரி அருகே வனத்துறை அதிகாரி வீட்டில் நகைகள் கொள்ளை

    • வீட்டில் யாரோ வந்திருப்பது போல சத்தம் கேட்கிறது என்று தெரிவித்துள்ளார்.
    • வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே யுள்ள கட்டிகானபள்ளி பகுதியை சேர்ந்தவர் ரகமதுல்லா (வயது 37). இவர் வனத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் தனது குடும்பத்து டன் ராயக்கோட்டை அருகேயுள்ள பூங்குறிச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    ரகமதுல்லாவின் வீட்டு மாடியில் உள்ள அறையில் உடல்நிலை சரியில்லாத அவரது தந்தை பாஷா மட்டும் தங்கியிருந்தார்.

    இந்நிலையில் ரகமதுல்லாவின் செல்போனுக்கு பேசிய பாஷா கீழே உள்ள வீட்டில் யாரோ வந்திருப்பது போல சத்தம் கேட்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து ரகமதுல்லா ஊருக்கு விரைந்து வந்தார்.அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    அதிர்ச்சி அடைந்த ரகமதுல்லா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    அதில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ரகமதுல்லா புகார்

    செய்தார் .

    போலீசார் வழக்கு பதிவு செய்து வனத்துறை அதிகாரி வீட்டில் கைவரிசை கட்டிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×