search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்மலையனூர் அருகே  பெண் போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்த சாமியார் மீது வழக்கு,
    X

    மேல்மலையனூர் அருகே பெண் போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்த சாமியார் மீது வழக்கு,

    • போலீசார் பாதுகாப்புடன் ஜே.சி.பி பொக்லைன் எந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர்.
    • செந்தாமரை (அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த அம்மு என்ற பெண் காவலரை கன்னத்தில் பளார் என்று 2 முறை அடித்தார்.

    விழுப்புரம் :-

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே செக்கடிக்குப்பம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியும்,விவசாயம் செய்து வருவதாக புகார் மனு அளிக்கப்பட்டது.கன்னத்தில் அறைஇதனை தொடர்ந்து மேல்மலையனூர் தாசில்தார் அலெக்ஸாண்டர் தலைமை யிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் நில அளவீடு செய்து ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக அவலூர்பேட்டை போலீசார் பாதுகாப்புடன் ஜே.சி.பி பொக்லைன் எந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர்.

    அப்போது மணி என்பவரின் மனைவி செந்தாமரை (அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த அம்மு என்ற பெண் காவலரை கன்னத்தில் பளார் என்று 2 முறை அடித்தார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த சக போலீசார் பெண் காவலர் அம்முவை அங்கு இருந்து அழைத்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.இதுபற்றி விசாரணை நடத்த ப்பட்டதில் விசாரி த்ததில் அந்த பெண்ணுக்கு சாமி வந்தால் எதிரில் இருப்ப வர்களை அடிப்பார்களாம். நேற்று அதே போல் சாமி வந்ததால் அடித்திருக்கலாம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து செந்தாமரை மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×