என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் அருகே மான் தோலை வைத்து சாமியாடிய 4 பேர் கைது
- மான் தோலை வைத்து சாமி ஆடுவதாக ஊர் மக்கள் நேற்று டேனீஸ்பேட்டை வனச்சரக அலுவலர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
- டேனீஸ்பேட்டை மின்வாரிய அலுவலகம் அருகே சாமி குறி சொன்ன 4 நபர்களையும் பிடித்து டேனீஸ்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் வைத்து வனச்சரக அலுவலர் தங்கராஜ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் மிட்டாபுதூர் பகுதியை சேர்ந்த முத்துராமன், சரவணன் மற்றும் பண்ணப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த சரவணன், தேமுட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த கணேஷ் ஆனந்தசாமி ஆகியோர் மான் தோலை வைத்து சாமி ஆடுவதாக ஊர் மக்கள் நேற்று டேனீஸ்பேட்டை வனச்சரக அலுவலர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், டேனீஸ்பேட்டை மின்வாரிய அலுவலகம் அருகே சாமி குறி சொன்ன 4 நபர்களையும் பிடித்து டேனீஸ்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் வைத்து வனச்சரக அலுவலர் தங்கராஜ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து பிடிபட்டவர்கள் கூறுகையில், எங்களுக்கு வேட்டையாட தெரியாது, ரொம்ப நாட்களுக்கு முன்பு இமயமலையில் இருந்து விலை கொடுத்து மான் தோலை வாங்கி வந்து குறி சொல்லி வருகிறோம் என்றனர்.
இருந்தாலும் வனத்துறை அதிகாரிகள், மான் தோலை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாமா? வேண்டாமா? என அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.