search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணத்தில் நெகிழி மாசில்லா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி- கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்
    X

    விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    கும்பகோணத்தில் நெகிழி மாசில்லா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி- கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்

    • தாராசுரம் காய்கறி வணிக வளாகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தாா்.
    • இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம், கும்பகோணம் மாநகராட்சி ஆகியவை சாா்பில் நெகிழி மாசில்லா தஞ்சாவூா் மாவட்டம் என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

    கும்பகோணம் மாநகரின் முக்கிய வீதி வழியாக சென்ற பேரணி நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முடிந்தது.

    இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.

    பின்னா், தாராசுரம் காய்கறி வணிக வளாகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தாா்.

    மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தின் மூலம் அமைக்கப்பட்ட இந்த இயந்திரத்தில் பொதுமக்கள் ரூ.10 நாணயத்தை செலுத்தி மஞ்சப்பைப் பெறலாம்.

    இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் செந்தில் முருகன், கும்பகோணம் கோட்டாட்சியா் பூா்ணிமா, துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாா், தமிழ்நாடு மாசுக் கட்டுபாடு வாரிய மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளா் ரவிச்சந்திரன், உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சித்ரா, இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் துணைத் தலைவா் முத்துக்குமாா் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×