search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் - நாளை நடக்கிறது
    X

    மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் - நாளை நடக்கிறது

    • தேரோடும் வீதிகளை தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.
    • புதிய தேர் வெள்ளோட்டத்தை சிறப்பாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ந்தேதி நடைபெற உள்ளது. உடுமலை நகர மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராம மக்களும் கொண்டாடும் பிரம்மாண்ட தேர்த்திருவிழாவுக்காக புதிய தேர் தயார் நிலையில் உள்ளது. இந்த புதிய தேருக்கான வெள்ளோட்டம் நாளை 23-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதனையொட்டி தேரோடும் வீதிகளை தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி தேர் செல்லும் வழித்தடத்தில் சாலைகளை சுத்தப்படுத்துதல், கழிவுகளை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. மேலும் சதாசிவம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த நகராட்சித் தலைவர் மு.மத்தீன் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் நேரடியாக ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்தி வருகிறார். இந்த நிலையில் சதாசிவம் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளால் சாலை குறுகலாகி தேர் செல்வதற்கு இடையூறு ஏற்படும் சூழல் இருந்தது. அதன்படி இந்த வீதியில் உள்ள கடைகளின் முன்புறம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த பந்தல்களை நகராட்சி ஊழியர்கள் பிரித்து அப்புறப்படுத்தினர்.

    மேலும் ஆக்கிரமித்து மேற்கொள்ளப்பட்டிருந்த கட்டுமான ப்பணிகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் உடைத்து அப்புறப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய தேர் வெள்ளோட்டத்தை சிறப்பாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×