search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் புதிய வகை கொரோனா முன்னெச்சரிக்கை:  கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்-மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
    X

    காரைக்காலில் புதிய வகை கொரோனா முன்னெச்சரிக்கை: கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்-மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

    • மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் பின்வரும் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது.
    • இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், அவர் கூறியிருப்பதாவது:-உலக நாடுகளில் புதிய வகை கொரோனா (கோவிட்- 19 ஓமிக்கிரான் பி.எப்7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் பின்வரும் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை கள் அமல்படுத்தப்படுகிறது. இதனால், மக்கள் அனைவரும் பொது இடங்கள், கடற்கரை, சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கட்டா யமாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    எதிர்வரும் புது வருட, 1.1.2023 அன்று 01 மணிக்கு மேல்(டிசம்பர் 31 நள்ளிரவுக்கு பிறகு) தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள், மதுபான கடைகள், பார்கள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை துறை நிறுவனங்கள் கோவிட்-19 தடுப்புக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றி தங்களின் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்க படுகிறது. மேலும், தங்களின் அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச்செல்லும் போது அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×