search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய வகை கொரோனா பரவல் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு
    X

    புதிய வகை 'கொரோனா' பரவல் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு

    • கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளது.
    • கோவை மாவட்டத்தில் தற்போது பெரியளவில் கொரோனா பாதிப்பு இல்லை

    கோவை,

    அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா நோய்த் தொற்று மிக தீவிரமாக பரவி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் தற்போது பெரியளவில் கொரோனா பாதிப்பு இல்லை. வெளிநாடுகளில் தொற்று அதிகரித்துள்ளதால் மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்டஅனைத்து வசதிகளும் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளன. நோய்த் தொற்று பரவல் அதி கரிக்கும்போது அனைத்தும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர்அருணா கூறியதாவது:-

    புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பைகண்டறிவதற்காக புதிதாக கொரோனா ெதாற்று உறுதி செய்யப்படுபவர்களின் சளி மாதிரிகள் சென்னையில் உள்ள மாநில பொது சுகாதாரத் துறை ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 2 நாள்களாக கோவையில் ஒருவருக்குகூட நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய் யப்படவில்லை. தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்று அறிகுறி களுடன் வருபவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையம் சார்பில் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெளி நாட்டுப் பயணிகளுக்கு பரிசோ தனை செய்யப்படுகிறது.

    காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத் தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×