search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • குன்னூர் டோபிகானா பகுதியில் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு
    • ஊழியர்கள் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் விதிமீறிய கட்டிடங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.

    குறிப்பாக நகராட்சியில் அதிகாரிகள் முறையாக இல்லாததே இதற்கு காரணம். இதனால் ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருப்பதாக கூறி கடந்த 2 நாட்களாக சிலர் போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண் குன்னூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

    அவர், திடீரென அலுவலகம் முன்பு வைத்து தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணை கேனை திறந்து உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைக்க முயன்றார்.

    இதனை அங்கு இருந்த ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடடினயாக ஓடி சென்று, அதனை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர்.

    அப்போது, அவர் டோபி கானா பகுதியில் சிலர் குடியிருப்பை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதனை தடுத்து நிறுத்த புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

    எனவே இவர்களை கண்டித்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

    கடந்த சில நாட்களாகவே குன்னூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிங்கள் அதிகளவில் கட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காட்டெருமை பலி.
    • வனத்துறையினர் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதி கொண்ட மாவட்டம். இங்குள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனவிலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன.

    குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பாலாடா செல்லும் சாலையில் 4 வயது மதிக்கத் தக்க ஆண் காட்டெருமை ஒன்று தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதாக குந்தா வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் குந்தா வனச்சரகர் சீனிவாசன் மற்றும் வனவர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் கொலக்கம்பை சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த காட்டெருமையை பார்வையிட்டனர்.

    அப்போது அதன் தலையில் காயங்கள் இருந் தன. காட்டெருமை எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர் பாலமுருகன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்தனர்.

    அப்போது காட்டெருமை யின் தலையில் இருந்து நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தும் தோட்டா மற்றும் பிளாஸ்டிக்கிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டது. காட்டெருமையின் தலைமையில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது வனத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததன் மூலம் யாரோ மர்மநபர்கள் காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு கொன்றது தெரிய வந்தது.

    இறந்த காட்டெருமையின் உடலை மாவட்ட வன அலுவலர் கெளதம் மற்றும் உதவி வன பாதுகாவலர் தேவராஜ் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    இதையடுத்து வனத்துறையினர் காட்டெருமையின் உடல் உறுப்புகளை தடய அறிவியல் துறை ஆய்வகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்த காட்டெருமையின் உடலை அங்கேயே புதைத்தனர்.

    தொடர்ந்து காட்டெருமையை சுட்டுக்கொன்றது யார்? என்பது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர். மேலும் காட்டெருமையை யாராவது இறைச்சிக்காக வேட்டையாடினார்களா? என்ற சந்தேகமும் நிலவுகிறது. அது தொடர்பாகவும் விசாரிக்கின்றனர்.

    இதற்கிடையே வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து தனிப்படை அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தனிப்படையினர் காட்டெருமை இறந்து கிடந்த பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள், காட்டேரி அணைக்கு மேல் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதில் காட்டெருமையை துப்பாக்கியால் சுடும் நபர் பதிவாகி இருக்கிறாரா என்பது ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து கிடந்த காட்டெருமையை உடல் கூராய்வு செய்த போது தலையில் இரும்பு மற்றும் ரப்பர் துண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டு சேகரிக்கப்பட்டன. காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    • ஜே.சி.பி. மற்றும் நவீன எந்திரங்களின் உதவியுடன் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    • இந்த வழித்தடத்தில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதை மற்றும் மலையறையில் பாதையில் அவ்வப்போது மண் சரிவு மற்றும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இதனிடையே குன்னூர் அருகே உள்ள பழைய அருவங்காடு பகுதியில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு, நெடுஞ்சாலை துறை மற்றும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை, தீயணைப்பு துறையினரும் இணைந்து ஜே.சி.பி. மற்றும் நவீன எந்திரங்களின் உதவியுடன் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் இந்த வழித்தடத்தில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களும் பெற்று வருகின்றனர்.
    • வருகிற 28-ந் தேதி தேதி செங்கல்பட்டுவில் விளையாட்டு ேபாட்டி நடைபெறவுள்ளது.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

    குறிப்பாக கைப்பந்து, கால்பந்து, டேபிள் டென்னிஸ், ஆக்கி, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களும் பெற்று வருகின்றனர்.

    இவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தி வரும் நிலையில் குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளியில் 68 மாணவ, மாணவிகள் தற்போது மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    வருகிற 28-ந் தேதி தேதி செங்கல்பட்டுவில் நடைபெற உள்ள மாநில விளையாட்டுப் போட்டிகளில் இந்த மாணவ - மாணவிகள் பங்கேற்பதற்காக தற்போது குன்னூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வரை தினமும் காலை, மாலையில் இயக்கப்படும் என அறிவிப்பு
    • புலிகள் காப்பக துணை களஇயக்குநா் வித்யா போக்குவரத்தை தொடங்கி வைத்தாா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள பழங்குடி கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் பள்ளிக்கு சென்றுவர தெப்பக்காடு சூழல் மேம்பாட்டுக்குழு சாா்பில் புதிய பஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதனை புலிகள் காப்பக துணை கள இயக்குநா் வித்யா தொடங்கி வைத்தாா்.

    நிகழ்ச்சியில் வனச்சரக ஊழியர்கள், பழங்குடி மக்கள், கூடலூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கீா்த்தனா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

    பழங்குடி மாணவா்கள் பள்ளிக்கு சென்று வீடு திரும்ப வசதியாக,தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வரை மேற்கண்ட பஸ் தினமும் காலை, மாலையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டினர்
    • மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அ.தி.மு.க 52-ம் ஆண்டு தொடக்க விழா மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் க சண்முகம் செய்திருந்தார்.

    தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க கட்சிக்கொடியேற்றி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டினர்.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் டி.கே.டி தேவராஜ், பாசறை மாவட்ட செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு, மீனவர் அணி செயலாளர் விஷாந்த், பேரூராட்சி செயலாளர் கண்ணபிரான், எம்.ஜி.ஆர் மன்ற நகர தலைவர் ஜெயராமன், அம்மா பேரவை செயலாளர் திவாகர், அவைதலைவர் சிவக்குமார், வர்த்தக அணி செயலாளர் பூக்கடை ஸ்ரீ, அம்மா பேரவை துணைத் தலைவர் சாந்தகுமார், கூட்டுறவு முன்னாள் தலைவர் சங்கர், இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ராஜேஷ், பிரபு, நகரமன்ற உறுப்பினர் லயோலோ குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை
    • அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    ஊட்டி,

    கூடலூர் ஒன்றிய தலைவர் கீர்த்தனா, தேவர்சோலை பேருராட்சி தலைவர் வள்ளி ஆகியோர் சென்னையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜை நேரில் சந்தித்து பேசினர்.

    தொடர்ந்து அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 5 பெரிய ஊராட்சிகளை கொண்ட கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடிப்படை தேவைகளை சிறப்பாக செய்து தர கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

    மேலும் அடிப்படை தேவைகளுக்கான கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டு மாவட்ட. நிர்வாகத்திடம் வழங்கபட்டு உள்ளது. அதற்கு தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்து உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

    கோரிக்கை மனுவை படித்து பார்த்த ஆதிதிராவிடர் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இதுகுறித்து உரியநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதி
    • நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம் பங்கேற்பு

    அருவங்காடு,

    குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு- ஜெகதளா இடைேயேயான ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அங்கு அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்தன.

    எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அருவங்காடு- ஜெகதளா ரோட்டை உடனடியாக சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அந்த சாலையை சீரமைக்க தற்போது ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து அருவங்காடு- ஜெகதளா ரோட்டில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது.

    இதற்கான நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம், செயற்பொறியாளர் வின்சென்ட், பேரூராட்சி தலைவர் பங்கஜம், துணைத்தலைவர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் போலீசார் ரூ.3.75 லட்சம் நிதி திரட்டினர்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா், சதீஷ் மனைவி அனிஷிதாவிடம் வழங்கி ஆறுதல்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, படிச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ் (வயது 45). இவா் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக வேலை பார்த்தார். இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா்.

    இந்த நிலையில் சதீஷ் கடந்த 13-ந்தேதி காலை சுள்ளியோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சேரம்பாடிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது லாரி மோதியதில் சதீஷ் உயிரிழந்தாா்.இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார், விபத்தில் இறந்த சதீஸ் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் ரூ.3.75 லட்சம் நிதியை திரட்டினர். தொடர்ந்து அந்த தொகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா், சதீஷ் மனைவி அனிஷிதாவிடம் வழங்கி ஆறுதல் கூறினாா்.

    • மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தொடங்கி வைத்தனர்
    • குன்னூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரவீன் உள்பட பலர் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி ஒன்றியம் குனியட்டி கிராமத்தில் இல்லந்தோறும் இளைஞரணி தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடந்தது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார், ஒன்றிய செயலாளர் பீமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில்குன்னியட்டி கிளை செயலாளர் குமார், ஊர் தலைவர் பெள்ளிராஜ், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சரத்குமார், ஒன்றிய இளைஞரணி மிதுன், குன்னூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரவீன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சந்திப், நகர மாணவரணி துணை அமைப்பாளர்வினோத் குமார், நகர ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ஸ்ரீதர், தனசக்தி, சாஜு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி அரசு குழந்தைகள் காப்பகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா
    • அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    பின்னர் குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கலெக்டர் அருணா நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கு தங்கி படிக்கும் மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும்.

    படித்து முடித்துவிட்டு ஏதாவது ஒரு வேலைக்கு செல்லலாம் என நினைக்காமல் எந்த வேலைக்கு போக வேண்டும் என தீர்மானித்து விட்டு, அந்த குறிக்கோளை எட்டும் வகையில் படிக்க வேண்டும். படிப்புடன் தனித்திறமை, தைரியம், சுய ஒழுக்கம் ஆகியவற்றை பின்பற்றி வந்தால் வாழ்க்கையில் நாம் விரும்பிய இலக்குகளை எளிதில் எட்ட இயலும். மேலும் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து காப்பகத்தில் உள்ள சமையலறை, விடுதி அறைகள் மற்றும் உணவு பொருட்கள் வைப்பறை ஆகியவற்றை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அதிகாரி பிரவீணாதேவி, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஷோபனா, குழந்தைகள் நலக்குழு தலைவர் ஹேமந்த்ரோச் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உடல் எடை பார்க்கப்படுவது வழக்கம்.
    • வனத்துறையின் எடை மையத்தில் வளர்ப்பு யானைகள் நிறுத்தப்பட்டு கணக்கெடுக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.

    இந்த முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு பராமரிக்கப்பட்டு வந்த மூர்த்தி என்ற வளர்ப்பு யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தது.

    தற்போது யானைகள் முகாமில், 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இங்கு பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உடல் எடை பார்க்கப்படுவது வழக்கம்.

    அதன்படி முதுமலை தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை கணக்கெடுப்பு நேற்று நடந்தது.

    இதற்காக முதுமலையில் இருந்து கூடலூர் தொரப்பள்ளிக்கு வளர்ப்பு யானைகள் அழைத்து வரப்பட்டது.

    பின்னர் வனத்துறையின் எடை மையத்தில் வளர்ப்பு யானைகள் நிறுத்தப்பட்டு கணக்கெடுக்கப்பட்டது.

    தெப்பக்காடு வனச்சரகர் பிரசாத் தலைமையிலான வனத்துறையினர், கால்நடை மருத்துவ குழுவினர் சங்கர், முதுமலை, சுஜய், சேரன், ரகு, மசினி, கிரி, செந்தில் வடிவு உள்பட 15 வளர்ப்பு யானைகளுக்கும் உடல் எடை சரிபார்க்கப்பட்டது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    கோடை காலத்தை விட தற்போது வளர்ப்பு யானைகளின் உடல் எடை சராசரியாக 130 கிலோ வரை அதிகரித்துள்ளது. மஸ்து உள்ளிட்ட காரணங்களால் மீதமுள்ள யானைகளின் உடல் எடை கணக்கெடுக்கவில்லை என தெரிவித்தனர்.

    ×