search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியாறு அணை குறித்து விஷம பிரசாரம் : கேரள தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும்- 5 மாவட்ட விவசாயிகள் கோரிக்கை
    X

    கோப்பு படம்

    பெரியாறு அணை குறித்து விஷம பிரசாரம் : கேரள தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும்- 5 மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

    • கூடலூரில் 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • விஷம பிரசாரம் செய்யும் தீவிரவாத அமைப்புகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தடை செய்ய வேண்டும்.

    கூடலூர்:

    கூடலூரில் 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியதாவது,

    முல்லைபெரியாறு அணை விசயத்தில் கேரளாவில் சில அமைப்புகள் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். 5 மாவட்டங்களின் நீர்ஆதாரமாக விளங்கும் முல்லைபெரியாறு அணையை இடித்தே தீரவேண்டும் என்றும், அந்த இடத்தில் புதிய அணை உருவாக்க வேண்டும் என முல்லைபெரியாறு சமரச சமிதி என்ற அமைப்பு கேரளாவில் இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு தீவிரவாத அமைப்பு போல் செயல்பட்டு வருகிறது.

    கேரள அரசு, வனத்துறை, நீர்வளத்துறை, தனியார் அமைப்புகள் ஆகியவை அணையின் பலம் குறித்து பொய்யான செய்திகளை கேரள மக்களிடையே தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது. அணையின் உறுதி தன்மை குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

    அதன்பின்னரும் அணையின் உறுதிதன்மை குறித்து சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர். சேவ்கேரளா பிரிகேட் முல்லைபெரியாறு சமரசசமிதி ஆகிய அமைப்புகள் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்து வருகிறது. இந்த அமைப்புகள் மீது தமிழக போலீசார் வழக்குபதிவு செய்யவேண்டும். இதுபோன்ற அமைப்புகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×